ஓய்வூதியர்கள் தர்ணா

கோவை, பிப். 3:  கோவையில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், வனத்துறை, காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7 ஆயிரத்து 850-ஐ வழங்க வேண்டும். முடக்கப்பட்ட 21 மாத நிலுவைத்தொகை, அகவிலைப்படி நிலைவை ஆகியவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. கோவை சிவானந்தகாலனி பவர்ஹவுஸ் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலாளர் மதன், ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சின்னசாமி, பொருளாளர் குடியரசு ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: