திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் அவகாசம் 18 நாட்களாக குறைப்பு

 

புதுடெல்லி: திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 48 நாட்களில் இருந்து 18 நாட்களாக குறைக்கப்படுவதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அறிவித்துள்ளார். மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி எழுப்பிய கேள்விக்கு எல்.முருகன் அளித்துள்ள பதில்: திரைப்பட சட்டம் 1952 மற்றும் திரைப்பட சான்றிதழ் விதிமுறைகள் 2024ன் படியே ஒன்றிய திரைப்பட தணிக்கை வாரியம் செயல்பட்டு வருகிறது. அதில் விதிமுறை பிரிவு 37ன் படி, திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க 48 வேலை நாட்கள் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

அதே சமயம் ஆன்லைன் முறை அமலாக்கத்திற்கு வந்த பின்னர், சான்றிதழ் வழங்குவதற்கான கால அவகாசம் 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திரைப்படங்களுக்கு 18 நாட்களுக்குள்ளும், குறும்படங்களுக்கு 3 நாட்களுக்குள்ளும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும். மேலும் திரைப்படங்களை மறு ஆய்வு குழுவிற்கு அனுப்புவதற்கான கால அவகாசமும் விதிமுறைகளில் இடம் பெற்றிருக்கிறது.

Related Stories: