மணிப்பூர் மாநிலத்தில் ஓராண்டாக அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஓராண்டாக அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. மணிப்பூரில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட குடியரசுத்தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது. மணிப்பூரில் 2025 பிப்.13 முதல் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி இன்றுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில் ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மணிப்பூர் மாநில பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக யும்நம் ஹேம்சந்த் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: