பாட்னா: பீகாரின் நாலந்தாவில் உள்ள ஒரு கோவிலில் (31-03-2026) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என கூறப்படுகிறது.
நாலந்தா மாவட்டத்தில் உள்ள மக்ரா கிராமத்தில் அமைந்துள்ள ஷீத்லாஷ்டமி கோவிலில் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் இந்த கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். மக்கள் சீத்தலா மாதா தரிசனத்திற்காக வருவார்கள். இன்று கூட்டம் மிக அதிகமாக இருந்துள்ளது. இந்த விபத்து நிர்வாகக் குறைபாட்டால் நிகழ்ந்தது என அங்குள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.
விபத்து நடந்த இடத்திலிருந்து வெளியான மனதை உலுக்கும் புகைப்படங்களில், ஏராளமான பெண்கள் தரையில் சுயநினைவின்றி கிடந்தது தெரியவந்தது. சிலர் அந்த பெண்களுக்கு முதலுதவி செய்வதுவருகின்றனர்.
