புலவயோ: ஐசிசி யு-19 உலகக் கோப்பை ஓடிஐ முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று, இளம் ஆஸ்திரேலியா அணியை, 27 ரன் வித்தியாசத்தில் இளம் இங்கிலாந்து அணி அபாரமாக வென்று இறுதிக்கு முன்னேறியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் முதல் அரையிறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள புலவயோ நகரில் நேற்று நடந்தது. அதில், இளம் ஆஸி – இளம் இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் தாமஸ் ரெவ் 107 பந்துகளில் 110 ரன் குவித்து ரன் அவுட்டானார். பின்னர், 278 ரன் இலக்குடன் களமிறங்கிய ஆஸி அணியின் துவக்க வீரர்கள் வில் மலாஜ்ஸுக் 15, நிதேஷ் சாமுவேல் 47 ரன் எடுத்து அவுட்டாகினர். பின் வந்தோரில் கேப்டன் ஆலிவர் பீக் மட்டும் சிறப்பாக ஆடி 88 பந்துகளில் 100 ரன் விளாசி ஆட்டமிழந்தார். 47.3 ஓவரில் ஆஸி 250 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், இங்கிலாந்து 27 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிக்கு முன்னேறியது.
ஆஸியுடன் உலகக்கோப்பை ஓடிஐ பைனலில் இளம் இங்கிலாந்து
- இளம்
- இங்கிலாந்து
- உலக கோப்பை
- ஆஸி
- புலவாயோ
- ICC U-19 உலகக் கோப்பை ODI
- ஆஸ்திரேலியா
- அண்டர் 19 உலகக் கோப்பை
