புதுடெல்லி: தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் அரசியல் கட்சிகள் மக்களை கவரும் திட்டங்கள் மற்றும் இலவசங்கள் பற்றி அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்க தடை விதிக்க வேண்டும். இதனால் மக்கள் தான் ஏமாற்றப்படுகிறார்கள். மேலும் தேர்தலுக்கு முந்தைய காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அளிப்பதை தடுக்கும் விதமாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற இலவசங்களை லஞ்சம் என்று அறிவிக்க வேண்டும். அதேபோல், நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அறிவித்து அதன் மூலம் வாக்கை பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. அதற்கும் தடை விதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
