புதுடெல்லி: ரூ.40,000 கோடி மதிப்புள்ள வங்கி கடன் மோசடி வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புனித் கார்க்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தொழில் அதிபர் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (ஆர்.காம்) மற்றும் அதன் குழும நிறுவனங்கள் ரூ.40,000 கோடிக்கும் அதிகமான வங்கி மோசடி மற்றும் பணமோசடி செய்ததாக எழுந்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை சுமார் ரூ.11 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கி உள்ளது. இந்த நிலையில் ஆர்.காம்-இன் முன்னாள் தலைவரும் இயக்குநருமான புனித் கார்க் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள சிறப்பு பணமோசடி தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) நீதிமன்றம் அவரை 9 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புனித் கார்க்கின் மனைவி பெயரில் உள்ள பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளை முடக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ரூ.40,000 கோடி வங்கி மோசடி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மாஜி தலைவர் கைது
- ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
- புது தில்லி
- அமலாக்க இயக்குநரகம்
- புனித் கார்க்
- அனில் அம்பானி
- ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்
- ஆர். காம்
