எஸ்எம்எஸ் மோசடி புகார் விங்கோ செயலிக்கு அரசு தடை விதிப்பு

புதுடெல்லி: பயனர்களின் தொலைபேசிகளை பயன்படுத்தி எஸ்எம்எஸ் மோசடி புகார்கள் எழுந்ததை அடுத்து விங்கோ செயலிக்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. விங்கோ செயலியானது ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரில் உள்ள ஒரு செயலியாகும். பல பங்கேற்பாளர்கள் ஒரே நேரத்தில் நேரடி குலுக்கலில் விளையாட அனுமதிக்கும் ஒரு மல்டிலேயர் பொழுதுபோக்கு விளையாட்டு என்று பட்டியலிடப்பட்டு இருந்தது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவுடன் இணையக் குற்றங்களை செய்வதற்காக பயனரின் தொலைப்பேசி மூலமாக செய்திகளை அனுப்பியுள்ளது.

நாள்தோறும் 1.53கோடி மக்களுக்கு இந்த செய்தி சென்று சேர்ந்துள்ளது. இந்த செயலியானது சிறிய தொகையை பெறுவதற்கு ஆசை காட்டியதன் காரணமாக 1.53லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களை அறியாமலேயே இந்த சைபர் குற்றங்களில் ஈடுபட அனுமதித்துள்ளனர். இந்த செயலிக்கு எதிராக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் மற்றும் இணையக் குற்ற தடுப்பு அமைப்பான இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் இணைந்து விங்கோ செயலிக்கு தடை விதித்துள்ளன. 1.53லட்சம் பயனர்களை கொண்ட 4 டெலிகிராம் சேனல்கள் அந்த செயலியை விளம்பரப்படுத்தும் 50க்கும் மேற்பட்ட யூடியூப் வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: