காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி

புதுடெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் , பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல ஒன்றிய அமைச்சர்களும் மகாத்மா நினைவிடத்தில் நேற்று வருகை தந்தனர். மலரஞ்சலி செலுத்திய அவர்கள் மறைந்த தேசந்தந்தைக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். நினைவிடத்தில் நடந்த அனைத்து மத பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான ரகுபதி ராகவ ராஜாராம் உள்ளிட்ட பாடல்கள் பாடப்பட்டன.

Related Stories: