*கயிறு இழுக்கும் போட்டியில் பெண்களுக்கு பாராட்டு
கறம்பக்குடி : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா நடைபெற்றது.
கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தொடங்கபட்டு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. ஒன்றிய அளவில் 2 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தடகளம், ஸ்ட்ரீட் கிரிக்கெட், கேரம், வாலிபால் போன்ற போட்டிகள் முதல் நாள் நடைபெற்றறு.
இதில் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளை சேர் ந்த இளைஞர்கள் மகளிர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் விளையாடினர். மேலும் நிறைவு நாளான நேற்று முன்தினம் நடைபெற்ற கபடி போட்டி.
கயிறு இழுத்தல், எறிபந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தன. போட்டிகள் நிறைவுவிழாவில் ஊராட்சிக இளைஞர் கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டன. ஒன்றிய அளவிலான ஊராட்சிகளுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் மகளிர் கயிறு இழுத்தல் போட்டியில் அம்புக்கோவில் ஊராட்சியைசேர்ந்த மகளிர் முதல் இடத்தை பிடித்தனர்.
அதேபோல வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டன. இவ்விழாவில் கறம்பக்குடி தாலுகா தாசில்தார் ஜமுனா, ஒன்றிய ஆணையர் சரோஜா வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூபதி, ராஜா, அருள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுகன்யா மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்திய மாவட்ட விளையாட்டு அரங்க பயிற்சி யாளர் ராஜாமணி.
உடற்கல்வி இயக்குனர்கள் ஆசிரியர்கள் முத்தையன், தாங்கதுரை, சின்னத்துரை, வாஞ்சினாதன், முருகானந்தம், மாரிமுத்து, கருணா மூர்த்தி, ஜெயபால், விஸ்வநாதன், வீரையன், செல்லக்கிளி, இளமதி, லீலாவதி, அனுசுயா, ஆறுமுக செல்வி, அருள் ஜோதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஊராட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் மகளிர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்ற ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனை களுக்கு இன்று மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அர ங்கத்தில் நடைபெற உள்ளது.
