சென்னை: தைப்பூசம் திருவிழாவை ஒட்டி நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை எழும்பூர் – நெல்லை – தாம்பரம் இடையே இன்றும், நாளை மறுநாளும் சிறப்பு ரயில் இயக்கம்; தாம்பரம் – தூத்துக்குடி – சென்னை கடற்கரை இடையே நாளை, நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கம்; விழுப்புரம் – கடலூர் துறைமுகம் – விருத்தாசலம் வரை முன்பதிவில்லா மெமு ரயில் பிப்ரவரி 1, 2, 3ல் இயக்கப்பட உள்ளது.
