மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த ஆந்திரா மூதாட்டி மாயம்

மதுரை, ஜன. 30: ஆந்திரா மாநிலம் சித்தூர் மோதிரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜூ மனைவி கோவிந்தம்மாள் (70). இவர் தனது உறவினர்களுடன் தென்மாவட்ட ஆன்மிக  தலங்களுக்கு சுற்றுலா வந்தார். சம்பவத்தன்று, மதுரைக்கு வந்த இவர்கள்  மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலை  சுற்றிபார்த்துவிட்டு அனைவரும் வெளியே வந்தனர். அப்போது, கூட்டத்தில்  வந்த கோவிந்தம்மாளை மட்டும் காணவில்லை. கணவர் நாகராஜூ கொடுத்த புகாரின்பேரில், மீனாட்சி கோயில் பாலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை தேடி  வருகின்றனர்.

Related Stories: