கரூர், ஜன. 29: கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம்) கரூர் மண்டல தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது. கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள பணிமனை முன்பு நடைபெற்ற இந்த வாயிற்கூட்டத்திற்கு பழனிச்சாமி தலைமை வகித்தார். மாநில சம்மேளன துணைத்தலைவர் ராஜேந்திரன் விளக்கவுரையாற்றினார்.
பொதுச் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சக்திவேல், மாநில நிர்வாக குழு உறுப்பினர் அன்புராஜ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். போக்குவரத்து கழகங்களில் தனியார் மயத்தை புகுத்தும் அரசின் நடவடிக்கைகளை கண்டித்து இந்த அமைப்பின் சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.
