புகழூர் நகர அலுவலகத்தில் திமுக ஆலோசனை கூட்டம்

வேலாயுதம்பாளையம், ஜன. 23: கரூர் மாவட்டம் புகழூர் நகர திமுக சார்பில், 24 வார்டு செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புகழூர் நகரக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, புகழூர் நகர திமுக செயலாளரும், புகழூர் நகர்மன்ற தலைவருமான குணசேகரன் தலைமை வகித்தார்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கடுமையாக செயல்பட்டு, பொதுமக்களை நேரடியாக சந்தித்து, திமுக அரசின் சாதனைகள் அனைத்தையும் எடுத்துக் கூறி, திமுக வேட்பாளருக்கு அரவக்குறிச்சி தொகுதியிலேயே புகழூர் நகராட்சி பகுதியில் அதிக வாக்குகள் கிடைக்க செய்ய வேண்டும்.

அதற்கான பணிகளை இப்போதே துவக்கிட வேண்டும் என்று கூறிய அவர், திமுக பொறுப்பாளர்கள் ஆக்கப் பணிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில், மாநில, மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், வாக்குசாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: