கரூர், ஜன. 22: அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் சதுரங்க அமைப்பு, கருர் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் சார்பில் பிப்ரவரி 11ம்தேதி ஒபன் சர்வதே சதுரங்க போட்டி நடைபெறவுள்ளது. இது குறித்து சதுரங்க அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது: கரூர் தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் சர்வதேச ஒபன் சதுரங்க போட்டி பிப்ரவரி 11ம்தேதி முதல் 15ம்தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் பங்கேற்கலாம். மொத்த பரிசுத் தொகை ரூ. 10 லட்சம். அதில், 500 பரிசுகள் ரூபாயாகவும், 350 பரிசுகள் கோப்பை மற்றும் பதக்கமாகவும் வழங்கப்படவுள்ளன. போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 31ம்தேதிக்குள் குறிப்பிட்ட தொகை செலுத்தி, 9894278402, 9843347862 மற்றும் 9943147227 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
