லைட்ஹவுஸ் கார்னரில் சுகாதார வளாகம் அமைக்க பொது மக்கள் கோரிக்கை

கரூர், ஜன. 26: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அனைத்து தரப்பினர்களும் பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகரின் நுழைவு வாயில் பகுதியாக லைட்ஹவுஸ் கார்னர் பகுதி உள்ளது. திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரூர் வரும் அனைத்து வாகனங்களும் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் நின்று பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன.

சுகாதார வளாகத்தை தேடி உழவர் சந்தை போன்ற பகுதிக்குத்தான் மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. லைட்ஹவு1 கார்னர் பகுதியின் அருகே உயர்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு நிறுவனங்களும் உள்ளன. எனவே, இந்த பகுதியை மையப்படுத்தி, அனைவரின் நலன் கருதி இந்த பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: