25ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

போச்சம்பள்ளி, மார்ச் 10: போச்சம்பள்ளி வட்டம், நக்கல்பட்டி கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் சிறப்பாக ஆண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவ, மாணவிகளின் பல வண்ண கலைநிகழ்ச்சிகள் மற்றும் கட்டுரைப்போட்டிகள், ஓவிய போட்டிகள், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தலைமை ஆசிரியர் சித்ரா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் தலைவர் விஜயன், துணை தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் பூபேஷ்சந்திரன், மணிமுத்து, ரேணுகா, ஜவகர், ஜோசப், யாஸ்மின், பானு, பிரகாசன், ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: