முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி

ஓசூர், மார்ச் 12: சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக முள்ளங்கி பயிரிட்டு வருகின்றனர். இங்கிருந்து அண்டைய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு நாள்தோறும் முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். கடந்த 3 மாதங்களுக்கு முன், ஒரு கிலோ முள்ளங்கி ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் சாகுபடி பரப்பினை அதிகரித்தனர். தற்போது சந்தையில் முள்ளங்கி வரத்து அதிகரித்து, விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ ரூ.6 முதல் ரூ.8 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்து முள்ளங்கி சாகுபடி செய்துள்ளோம். ஆனால், வெறும் 6 ரூபாய்க்கு கேட்கிறார்கள். அறுவடை கூலி, வண்டி வாடகைக்கே பெரும் தொகையைச் செலவிட வேண்டியுள்ளதால், பல விவசாயிகள் முள்ளங்கியைப் பறிக்காமல் தோட்டத்திலேயே விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்,’ என்றனர்.

Related Stories: