இந்தியாவின் முதல் ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயிலில் சைவ உணவுகள் மட்டுமே இருப்பதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், ஒரு வாரத்தில் இறைச்சி உணவுகளானது ரயிலின் மெனுவில் சேர்க்கப்படும் என கிழக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் ஹவுராவில் இருந்து அசாமின் காமக்யா ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
