மும்பை: அஜித் பவார் பயணம் செய்த விமானம் பற்றி பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 8-வது துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். இன்று 10 மணி அளவில் இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிறிய விமானம் மூலம் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் சரத்பவார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அஜித் பவார் பயணம் செய்த விமானம் பற்றி பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அஜித் பவார் பயணம் செய்த விமானம் லியர்ஜெட் 45 எனப்படும் சிறிய ரக விமானம் ஆகும். வழக்கமாக விஐபி-க்களுக்காக பயன்படுத்தப்படும் லியர்ஜெட் 45 விமானம் இரட்டை எஞ்சின்களை கொண்டது. பாம்பார்டியர் நிறுவனம் தயாரிக்கும் லியர்ஜெட் மாடல் விமானங்கள் 1990களின் இறுதியில் அறிமுகமானவை. 1998ம் ஆண்டு லியர்ஜெட் மாடல் விமானங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. குறைந்த தூர விமான பயணங்களுக்கு பயன்படுத்தப்படுவது லியர்ஜெட் 45 ரக விமானம்.
சிறிய நகரங்களுக்கு பரப்புரைக்கு செல்ல அரசியல்வாதிகளால் லியர்ஜெட் 45 விமானம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மணிக்கு 850 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக் கூடிய திறன் கொண்டது லியர்ஜெட் 45 ரக விமானம். அதிகபட்சமாக 3,000 கி.மீ. பயணிக்கும் திறனுள்ளதால் இந்தியாவில் பயணிக்க அரசியல்வாதிகள் பெரிதும் பயன்படுத்துகின்றனர். ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 2,700 கி.மீ. வரை லியர்ஜெட் 45 ரக விமானத்தில் பயணம் செய்யலாம். செப்டம்பர் 2023ல் வி.எஸ்.ஆ.ர் நிறுவனத்தால் இயக்கப்படும் லியர்ஜெட் ரக விமானம் மும்பையில் விபத்தில் சிக்கியிருந்தது
சிறு விமான நிலையங்கள், குறுகிய ஓடுபாதைகளில் இயக்கும் வகையில் லியர்ஜெட் 45 விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 முதல் 8 பயணிகள் வரை லியர்ஜெட் 45 ரக விமானத்தில் பயணம் செய்ய முடியும். 15 மீட்டர் நீளம் கொண்ட லியர்ஜெட் 45 விமானத்தில் பயணிகள் அமரும் பகுதி 20 அடி நீளம் கொண்டது. லியர்ஜெட் 45 விமான த்தில் 5 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்டதாக பயணிகள் அமரும் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
