தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிப்.4,5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!!

டெல்லி: தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிப்.4,5ம் தேதிகளில் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது. Central Observers ஆக பணியாற்ற உள்ள IAS, IPS அதிகாரிகள் மற்றும் உள்துறை செயலாளர்களுக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மேற்பார்வையாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து டெல்லியில் தேர்தல் ஆணையம் விவரிக்கிறது. கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: