தொண்டி, ஜன.28: தொண்டி அரசு கிழக்கு துவக்கப்பள்ளி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி காளீஸ்வரி, கவிதா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி பானு முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு, ஜவஹர் அலி கான், நவ்பல் ஆதம், வட்டார கல்வி மேற்பார்வையாளர் கார்த்திக் உட்பட பலர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
அரசுப்பள்ளி ஆண்டு விழா
- அரசுப் பள்ளி ஆண்டு விழா
- தொண்டி
- தொண்டி அரசு கிழக்கு தொடக்கப்பள்ளி
- தலைமை ஆசிரியர்
- லியோ ஜெரால்ட் எமர்சன்
- பள்ளி நிர்வாகக் குழு
- தலைவர்
- காளீஸ்வரி
- கவிதா
- பெற்றோர் ஆசிரியர் சங்கம்
- பானு…
