வாலிபர் கொலை வழக்கில் 5 பேரிடம் விசாரணை

வேளச்சேரி, ஜன.28: அடையாறு இந்திரா நகர் 1வது அவென்யூ சாலையில் உள்ள பிரபல பைக் ஷோரூம் அருகில் கடந்த 26ம் தேதி காலை ஒரு சாக்கு மூட்டை கேட்பாறற்று கிடந்தது. அதில் இருந்து ரத்தம் வழிந்தது. தகவலறிந்து வந்த அடையாறு போலீசார், சாக்கு மூட்டடையை பிரித்து பார்த்தபோது பலத்த வெட்டு காயங்களுடன் வாலிபர் சடலம் இருந்தது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மொபட்டில் வந்த இரு வாலிபர்கள், சாக்குமூட்டையை இங்கு வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது. அந்த மொபட் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர்.

மேலும் இறந்தவர் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டபோது, அடையாறில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகம் எனவும், கடந்த 22ம் தேதி பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பவர் தனது மனைவி முனிதா குமாரியுடன் வந்து காவலாளி வேலை கேட்டதாகவும், தற்போது வேலை காலி இல்லாததால், தேவைப்படும் போது, அழைப்பதாக கூறி அனுப்பி வைத்தாகவும், தற்போது அவர் தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது கொலை செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுரவ் குமார் என தெரியவந்தது. இதையடுத்து, அவரது நண்பர் உள்பட 5 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: