38 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை, ஜன. 22: சென்னையில் 38 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்த உத்தரவு: ராயபுரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் காதர் மீரா, மாதவரம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், திரு.வி.க.நகர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கிருபாநிதி, மதுரவாயல் குற்றப்பிரிவுக்கும், எஸ்பிளனேடு இன்ஸ்பெக்டர் பிரபு, புழல் குற்றப்பிரிவுக்கும், பாண்டி பஜார் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், மீனம்பாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், கொத்தவால்சாவடி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராஜன், வளசரவாக்கம் குற்றப்பிரிவுக்கும், அடையார் சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கனி, நொளம்பூர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், வேளச்சேரி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜெயராம், மதுரவாயல் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், வானகரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி, கோயம்பேடு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் என சென்னை முழுவதும் 38 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்ய்யப்படுகின்றனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: