வேளச்சேரி, ஜன.23: வேளச்சேரி அடுத்த, பெரும்பாக்கம், எழில் நகர், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதி பூங்காவில் நேற்று இரவு தலையில் கல்லை போட்டு கொலை செய்த நிலையில் வாலிபர் சடலமாக கிடப்பதாக பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலையானவர் பெரும்பாக்கம், எழில்நகர், எஸ்.பிளாக்கை சேர்ந்த கார்த்திக்கேயன் (25) என தெரியவந்தது. இவர் ஏற்கனவே பல குற்றங்களை ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்தவர். முன்விரோதம் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
