சென்னை: ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ஜனநாயகன் படத்தில் வெளிநாட்டு சக்திகள் மத மோதலை இந்தியாவில் தூண்டுவதாக சில வசனங்கள் இடம்பெற்றுள்ளன. ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து; ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பலாம். ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
