கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகம் யானைகள் முகாமில் 77வது குடியரசு தினவிழா யானைகள் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியான தெப்பக்காடு யானை முகாமில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை முழக்கத்துடன், வனத்துறையினர் அணி வகுப்பு மரியாதையுடன் புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபா சங்கர் கொடியேற்றினார்.
அப்போது பொம்மி, கிருஷ்ணா, கிரி, பாமா, காமாட்சி ஆகிய ஐந்து வளர்ப்பு யானைகள் வரிசையாக நின்று துதிக்கையை தூக்கி மூவர்ண கொடிக்கு மரியாதை செலுத்தின.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுலா பயணிகள் யானைகள் அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெற்ற குடியரசு தின விழாவை பார்த்து ரசித்தனர்.
