கவரிங் நகை திருடிய பேரூராட்சி துணைத்தலைவர் அதிரடி கைது

குளச்சல்: குமரி மாவட்டம் கருங்கல் அருகே பெருமாங்குழியை சேர்ந்தவர் ஷர்லின் சாம்(35).இவர் குளச்சல் நகராட்சி பேரூந்து நிலைய வணிக வளாகத்தில் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார்.கடந்த 15 ம் தேதி மதியம் இவரது கடைக்கு 4 பெண்கள் மற்றும் ஒரு வாலிபர் நகை வாங்க வந்தனர். அப்போது பெண் பணியாளரின் கவனத்தை திசை திருப்பி கும்பல் நகைகளை எடுத்து கொண்டு நகைகளை வாங்காமல் திரும்பி சென்றனர்.

மறுநாள் கடையில் இருப்பு நகைகளை கணக்கெடுக்கும்போது நகைகள் குறைவாக இருந்தது. உடனே சிசிடிவிகேமராவை ஆய்வு செய்தபோது கும்பல் நகைகளை திருடியது தெரிய வந்தது. புகாரின்படி குளச்சல் போலீசார் சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் நெல்லை மாவட்டம் கன்னங்குளத்தை சேர்ந்த டிரைவர் அனீஷ்(29), புத்தளம் பேரூராட்சி துணைத்தலைவர் பால்தங்கம்(50), இவரது மகள் சபரிஷா(30), உறவினர் தங்கபுஷ்பம் (50) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: