நியூசிலாந்துக்கு எதிரான போட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ராய்ப்பூர்:இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், 2வது டி20 போட்டி, ராய்ப்பூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீசியது. முதலில் களமிறங்கிய நியூசி துவக்க வீரர்கள் டெவான் கான்வே 19, டிம் ஷெபெர்ட் 24 ரன் எடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின் வந்த கிளென் பிலிப்ஸ் 13 பந்துகளில் 19 விளாசி ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த மார்க் சாப்மேன் 10 ரன்னில் வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் மிட்செல் சான்ட்னர், ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். 20 ஓவர் முடிவில், நியூசிலாந்து, 6 விக்கெட் இழந்து 208 ரன் குவித்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 2, ஹர்திக் பாண்ட்யா, ஹர்சித் ராணா, வருண் சக்ரவர்த்தி, சிவம் தூபே தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர், 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணி அபராமாக ஆடிய இந்திய அணி 15.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 82 ரன்கள் எடுத்தார். சிவம் துபே 36 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டி 20 போட்டியில் 2-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.

Related Stories: