காஞ்சிபுரம், ஜன.24: காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு 2 ஆண்டுகளாக மாவட்ட தலைவர் இல்லாததால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பரிந்துரையின்பேரில், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த எஸ்.ஏ.அருள்ராஜை காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக நியமித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட புதிய மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட அருள்ராஜ் அறிமுக கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது. காஞ்சிபுரம் மாநகர தலைவர் நாதன் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் குமார குருநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களின் முன்னிலையில், முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜீவி.மதியழகன், மாவட்ட தலைவர் அருள்ராஜை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது, மாவட்ட தலைவர் எஸ்.ஏ.அருள்ராஜ், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்திட கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பத்மநாபன், நிக்கோலஸ், குப்புசாமி, அன்பு, யோகி, சுகுமார், வட்டார தலைவர்கள் பிச்சாண்டி, குமரேசன், ஆதிகேசவன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுக கூட்டம்
- காஞ்சிபுரம் மாவட்டம்
- காங்கிரஸ்
- சந்தித்தல்
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
- ஜனாதிபதி
- செல்வப்பெருந்தகை
- சட்டமன்ற உறுப்பினர்
- எஸ்.ஏ. அருள்ராஜ்
- ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி
- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
