காஞ்சியில் இதுவரை 1,533 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13 கோடி மதிப்பில் உதவி உபகரணங்கள்

காஞ்சிபுரம், மார்ச் 10: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் சிறப்புப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1500லிருந்து ரூ.2000ஆக உயர்த்தியும், தேசிய அடையாள அட்டைகள், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் , இலவச தையல் இயந்திரம், கையடக்க திறன்பேசி , குறு மற்றும் சிறுத்தொழில் தொடங்கப்பட வங்கி கடனுதவி மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வங்கி கடனுதவிக்கான மானியத்தொகையும், சட்டப்படிப்பு பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவியும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மூலம் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மரணத்திற்கான நிவாரணத்தொகையும் வழங்கப்பட்டு வருவதோடு, பல்வேறு உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 07.05.2021 முதல் இதுநாள் வரையில் 1,533 மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு ரூ.13 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், கையடக்க திறன்பேசிகள், மூன்று சக்கர வண்டிகள், மடக்கு சக்கர நாற்காலிகள், காதொலி கருவிகள் மற்றும் சிறப்பு சக்கர நாற்காலிகள் ஆகிய உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related Stories: