திருப்போரூர், மார்ச் 4: திருப்போரூர் சான்றோர் தெருவை சேர்ந்தவர் கலையரசன். (36) இவர் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், திருப்போரூர் நகர திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் செங்கல்பட்டு, சைபர் கிரைம் குற்றப்பிரிவில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். புகாரில், நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை தரக்குறைவாக பேசி, துணை முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தும், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு வீடியோ பதிவை கண்டேன். வீடியோவை பதிவிட்டவர் திருப்போரூர் அருகே உள்ள செம்பாக்கம் அடுத்த அச்சரவாக்கம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் கிஷோர் என்பது தெரியவந்தது. எனவே அர்மீது உரிய நடவடிக்கை எடுத்து, அந்த வீடியோவை சமூக வலை தளத்திலிருந்து நீக்கி அவரது இன்ஸ்டா பக்கத்தையும் முடக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கிஷோர் த.வெ.க.வைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
முதல்வர் குறித்து அவதூறு ரீல்ஸ் தவெக நிர்வாகி மீது வழக்கு
- தவெகா
- முதல் அமைச்சர்
- திருப்பூருர்
- கலையரசன்
- சான்னோர் தெரு, திருப்போரூர்
- திமுக
- செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்
- சைபர்
- செங்கல்பட்டு.…
