100 நாள் வேலை திட்ட பெண்களுடன் காங். தலைவர் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம், பிப்.28: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊனமலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அங்கு திடீரென சென்ற காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரும், காஞ்சிபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமன விஸ்வநாதன் காந்தி படத்தை கையில் பிடித்தபடி பெண்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணுவிற்கு மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் அங்கு கூடியிருந்த பெண்களுக்கு புடவை வழங்கினார். இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜாராமன், ராஜேஷ், வட்டாரத் தலைவர் கோடீஸ்வரன், தனசேகரன், கந்தசாமி, ஜெயபால், அசோக், சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: