மகளிர் தினத்தையொட்டி இலவச அனுமதி சுற்றுலா பயணிகளால் களைகட்டிய மாமல்லபுரம்

 

மாமல்லபுரம், மார்ச் 9: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதனால், மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் களைகட்டியது. பெண்களின் மகத்தான சாதனைகளை போற்றும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு, சுற்றுலா பயணிகள் கட்டணம் இன்றி புராதன சின்னங்களை கண்டு ரசிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்தது.

Related Stories: