புதுடெல்லி: உலகக் கோப்பை டி20 தொடரில் வங்கதேச கிரிக்கெட் அணி ஆடும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்தும்படி வங்கதேச கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கை தொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிர்வாகிகள் குழு கூடி விவாதித்தது. அதன் முடிவில், வங்கதேசத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், ‘வங்கதேச கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்தோம். அந்த அணி வீரர்களுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் கிடையாது என்பது பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. மேலும், போட்டிகள் நடக்க குறுகிய காலமே உள்ள நிலையில் எவ்வித மாற்றமும் தற்போது செய்ய முடியாது. எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி போட்டிகள் நடக்கும்’ என கூறப்பட்டுள்ளது.
வங்கதேச கோரிக்கை ஐசிசி நிராகரிப்பு
- ஐசிசி
- புது தில்லி
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
- ICC) இயக்குநர்கள் குழு
- பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்
- உலகக் கோப்பை டி 20
- இந்தியா
- வங்காளம்
