பழங்குடியினர் குடியிருப்பில் வீட்டு தோட்டம் அமைக்க பயிற்சி

வாலாஜாபாத், ஜன.23:காஞ்சிபுரம் மாவட்டம் குழந்தைகள் கண்காணிப்பு சேவை நிறுவனத்தின் சார்பில் இயற்கை உரங்களை பயன்படுத்தி வீட்டுத் தோட்டம் அமைத்து காய்கறிகள் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி முகாம் நேற்று வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் ஊராட்சி பழங்குடியினர் குடியிருப்பில் நடைபெற்றது. குழந்தைகள் கண்காணிப்பு நிறுவனத்தின் நிர்வாகி ராஜி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிங்காடிவாக்கம் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பழங்குடியின மக்களுக்கு காய்கறி விதைகள், மண்புழு உரம், இயற்கை உரங்கள் மற்றும் கத்திரிக்காய், தக்காளி பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்று, செடிகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் எளிய முறையில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து முகாமில் விளக்கி கூறப்பட்டது. காய்கறி விதைகளை பெற்றுக் கொண்ட பழங்குடியின மக்கள் உடனடியாக அவர்களின் வீடுகளின் அருகாமையில் இயற்கை முறையில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டனர்.

Related Stories: