சரவம்பாக்கம் ஊராட்சியில் பாழடைந்த குளத்தை தூர் வார கோரிக்கை

செய்யூர், ஜன.23: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ளது சரவம்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சித்தாமூர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையத்தை ஒட்டியவாறு சரவம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குளம் அமைந்துள்ளது. பல வருடங்கள் பழமையான இந்த குளம் ஒரு காலத்தில் கால்நடைகள் மற்றும் அப்பகுதிவாசிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வந்தது. வற்றாத இந்த குளம் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சுற்றியுள்ள நான்கு புற கரைகளும் சேதமானது. மேலும் நாளுக்கு நாள் குளத்தை ஆக்கிரமித்து குடியிருப்புகள் வந்ததோடு குப்பைகள் கொட்டும் இடமாக குளம் மாறியது. தற்போது குளம் முழுவதும் செடிகொடிகள் வளர்ந்து குளத்தில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர் வாரி கரைகளை பலப்படுத்தி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: