டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்குப் பயணம் செய்யப் போவதில்லை: வங்கதேசம் அறிவிப்பு

டாக்கா: பிப்ரவரி 7ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்குப் பயணம் செய்யப் போவதில்லை என வங்கதேச அணி தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், தங்களது டி20 உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அணி வீரர்கள் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இந்த முடிவை எடுத்தது. இந்தப் போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்க நேற்று(22-01-2026) பிசிபி-க்கு 24 மணி நேரக் காலக்கெடு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தாங்கள் இந்தப் போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் இந்தியாவில் விளையாட விரும்பவில்லை என்றும் பிசிபி தெரிவித்துள்ளது.

Related Stories: