மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 2வது சுற்றில் 6வது ரேங்க் அமெரிக்காவின் 31 வயது ஜெசிகா பெகுலா 6-0, 6-2 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தினார். நடப்பு சாம்பியனும், 19வது ரேங்க் வீராங்கனையுமான அமெரிக்காவின் 30 வயது மேடிசன் கீஸ் 6-1, 7-5 என சகநாட்டைச் சேர்ந்த ஆஷ்லின் க்ரூகரை வென்றார்.
ஸ்பெயினின் பவுலா படோசா 4-6, 4-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் 23 வயது ஒக்ஸானா செலக்மெதேவாவிடம் தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையரில் 5ம் நிலை வீரரான இத்தாலியின் லோரென்சோ முசெட்டி, 8வது ரேங்க் அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோரும் 2வது சுற்றில் வெற்றிபெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
