தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா மற்றும் புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளதாக அறிவிப்பு

 

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி.கே.வாசனின் த.மா.கா மற்றும் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். நேற்று எடப்பாடி இல்லாமலேயே டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்த்தார் பியூஷ் கோயல். கூட்டணிக்கு எடப்பாடி தலைமை வகித்தாலும் அவரை ஓரங்கட்டி விட்டு புதிய கட்சிகளை பாஜகவே சேர்த்து வருகிறது. கூட்டணியில் கட்சிகள் சேரும் நிகழ்ச்சிகள் எதிலும் எடப்பாடி பழனிசாமி இல்லாததால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுடன் ஜி.கே.வாசன் சந்தித்தனர்.

Related Stories: