கருங்கல், ஜன.21: அரசு உதவிபெறும் பள்ளியான விழுந்தயம்பலம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. கிள்ளியூர் பேரூராட்சி துணை தலைவர் சத்தியராஜ் மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி தமியான் மேரி, ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடை தூக்கி அரசு பள்ளி
குலசேகரம்: குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட கூடைத்தூக்கி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இதனை குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ் தொடங்கி வைத்தார். துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், கவுன்சிலர் சுபாஷ் கென்னடி, தலைமை ஆசிரியர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல் புனித ஜோசப் பள்ளி
- செயிண்ட் ஜோசப் பள்ளி
- Karungal
- செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி
- விதியம்பலம்
- கிள்ளியூர் டவுன்
- பஞ்சாயத்து
- துணை ஜனாதிபதி
- சத்யராஜ்
- சகோதரி டாமியன் மேரி
