வதோரா: இந்தியாவில் நடந்து வரும் மகளிர் பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடரின் 12வது போட்டியில் நேற்று குஜராத், ஆர்சிபி அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்ய ஆர்சிபி அணி ஓப்பனராக இறங்கிய கிரேஸ் ஹாரிஸ் 1 ரன், கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 26 ரன், அடுத்து இறங்கிய வோல் 1 ரன் அடுத்து அவுட் ஆகினர். அடுத்து ரிச்சா கோசுடன் ஜோடி சேர்ந்த கவுதமி நாயக் அதிரடியாக விளையாடி 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து ரிச்சா கோஷ் 27 ரன், ராதா யாதவ் 17 ரன்னில் அவுட் ஆக ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. அடுத்து 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
மகளிர் பிரிமியர் லீக்: குஜராத்திற்கு 179 ரன் இலக்கு
- பெண்கள் பிரீமியர் லீக்
- குஜராத்
- வதோதரா
- பெங்களூர்
- மகளிர் பிரீமியர் கிரிக்கெட் லீக்
- இந்தியா
- கிரேஸ் ஹாரிஸ்'
