பரிமாறப்பட்ட சமைக்காத சத்தான உணவு வகைகள் வட்டார கல்வி அலுவலர் பங்கேற்பு நடுநிலைப்பள்ளி பொங்கல் விழாவில்

செய்யாறு, ஜன.20: செய்யாறு நகரில் உள்ள பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வட்டாரக்கல்வி அலுவலர் பிரியா தலைமையில் தலைமையாசிரியர் இரா.தேன்மொழி முன்னிலையில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவினை நேற்று கொண்டாடினர். இவ்விழாவில் பெற்றோர்கள் ஆர்வமுடன் கோலாப்போட்டி, சத்தான சமைக்காத உணவுப்போட்டிகளில் பங்கேற்றனர். மாணவர்கள் பெற்றோர்களுக்கு தலைவாழையில் சர்க்கரை பொங்கல், வடை, பாயத்துடன் அறுசுவை உணவு மற்றும் பெற்றோர்கள் செய்த சமைக்காத சத்தான உணவும் ஆசிரியைகள் மாலதி, அகிலா, பபிதா, நிவேதா, சிவகாமி, சத்துணவு பணியாளர்கள் அனைவரும் பரிமாறினர். போட்டியில் பங்கேற்பு செய்த பெற்றோர்களுக்கு கதை புத்தகங்களை வட்டாரக்கல்வி அலுவலர் பரிசாக வழங்கினர்.மாணவர்களுக்கு நடனம் , ஓவியம் இசை நாற்காலி, கயிறு இழுத்தல் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories: