மாடு மேய்ந்த தகராறில் மோதல் போலீசார் விசாரணை விவசாய நிலத்தில்

வந்தவாசி, ஜன.20: வந்தவாசி அடுத்த ஆவணவாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் மாடு மேய்ந்த தகராறில் மோதல் ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆவணவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(40), டீக்கடை உரிமையாளர். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த துரை(45) என்பவருக்கு சொந்தமான மாடு கடந்த 13ம் தேதி மேய்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த மோகனின் மனைவி வைஷ்ணவி, மாடு மேய்த்துக்கொண்டிருந்த துரையின் மனைவி ஈஸ்வரியிடம் தட்டி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனை அறிந்த மோகனும் துரையும் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து வைஷ்ணவி, ஈஸ்வரி ஆகிய இருவரும் தனித்தனியே பொன்னூர் போலீசில் நேற்று புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் இருதரப்பு புகார் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: