தமிழகம் முழுவதும் வரும் 25ம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: திமுக மாணவர் அணி செயலாளர் அறிவிப்பு

 

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 25ம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக மாணவர் அணி செயலாளர் அறிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். திமுக மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி வெளியிட்ட அறிவிப்பு: நம் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தித் திணிப்பு எனும் கோரைப் பற்களுக்கு எதிராக மாநில மொழியுரிமை வாளையும், தமிழின் தொன்மை மரபை உலகுக்கு உணர்த்தும் கீழடி கேடயத்தையும் ஏந்தி நிற்கிறார். இந்தியைக் கொண்டு வந்து நம்மிடம் வாலாட்டத் துடிக்கும் சங்கிகளுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் நம்முடைய இளைஞரணிச் செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். எரிநெருப்பும் சிந்திய ரத்தமும் அதில் கலந்த மொழிப்போர் வீரர்களின் தியாகமும் நமக்கு உணர்த்தும் வரலாறுச் செய்தி ஒன்றுதான்: ”உரிமைப் போரில் உறங்குபவனுக்கு வாழ்வு கிடையாது!” வரும் ஜனவரி 25ம் தேதியன்று, மொழிப்போர் தியாகிகள் தினத்தில் நாம் எடுக்கும் உறுதிமொழி நமக்குச் சடங்கான செயல் அல்ல.

அது ஆதிக்கவாதிகளின் செவிகளுக்கு அண்ணா, கலைஞர், தலைவர் மு.க.க.ஸ்டாலின் வழியில் நாம் விடுக்கும் அறைகூவல்!. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! எங்கள் மொழி, எங்கள் அடையாளம்! கீழடி தமிழர் தாய்மடி.தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் தமிழ்நாட்டைத் தலை குனிய விட மாட்டேன். தமிழ் வாழ்க! தியாகிகள் சிந்திய குருதி காய்ந்திருக்கலாம்; ஆனால் அவர்கள் பற்றவைத்த உணர்வுத் தீ என்றும் அணையாது. நம் வருங்கால தலைமுறைகளின் எதிர்காலத்திற்காக, நம் பண்பாட்டு அடையாளங்களைக் காப்பதற்காக, மண், மானம், மொழி, இன உரிமைகளை மீட்பதற்காக, மீண்டும் ஒரு சேனை தேவை! அந்தச் சேனை, கொள்கை வீரர்களாகிய திமுக மாணவர் படையே என்ற உரத்த சிந்தனையுடன் களம் காண்போம்! தீ பரவட்டும்! திமுக தலைவர் தலைமையில் இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! அன்னைத் தமிழை உயிரினும் மேலாக காப்போம்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ். தமிழுக்கு அமுதென்று பேர்-அந்தத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!. உரையாற்றுவோர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதில் க.சுந்தர் எம்.எல்.ஏ., கலந்து கொள்கிறார். சைதாப்பேட்டை-பொதுச்செயலாளர் துரைமுருகன், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., மா.சுப்பிரமணியன், நே.சிற்றரசு, மயிலை த.வேலு. தாம்பரம்-பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., தா.மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா, எம்.எல்.ஏ., நெய்வேலி இரா.தமிழரசன் நா.அருண். திருச்சி -முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, வி.பி.கலைராஜன், க.வைரமணி, பி.எம்.ஆனந்த், அ.அருண்குமார் கலந்து கொள்கின்றனர். புதுக்கோட்டையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு உரையாற்றுகிறார். திருவொற்றியூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இதில் மாதவரம் எஸ்.சுதர்சனம், எம்.எல்.ஏ., பி.கே.சேகர்பாபு, ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ., அ.தா. டெக்சின் ரொமேரியா ஆகியோர் பங்கேற்கின்றனர். இதே போல சிங்காநல்லூர்- மாணவர் அணி செயலாளர் இரா.ராஜீவ்காந்தி, துரை.செந்தமிழ்ச்செல்வன், வி.ஜி.கோகுல், சி.கா.சுகன் மந்த்ரன். பூவிருந்தவல்லி-கவிஞர் மனுஷ்யபுத்திரன், சா.மு.நாசர், தாம்பரம் ஜின்னா, ஆஷிகா பர்வின் பங்கேற்கின்றனர்.

Related Stories: