டெல்லி : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நேற்று முடிவடைந்த நிலையில் ஜன.30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று வரை 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
