குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள ஓதனட்டி பகுதியில் நடந்த கட்டுமான பணியின்போது, நேற்று முன்தினம் மண் சரிந்து விழுந்ததில் கொல்கத்தாவை சேர்ந்த அப்துல் ரகுமான் (22), நசீர் உசேன் (33), உஸ்மான் (36) ஆகியோர் மண்ணிற்குள் உயிருடன் புதைந்து மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் மார்டின் கைது செய்யப்பட்டுள்ளார். இடத்தின் உரிமையாளர் முத்துகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த 3 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.8 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி, தமிழக அரசு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு தலா ரூ.8 லட்சம் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மூலம் கொல்கத்தா மாநிலத்தில் உள்ள இவர்களின் குடும்பத்திற்கு வழங்க அந்த மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
