இன்று காணும் பொங்கல் சுற்றுலாத்தலங்களில் திரளும் லட்சக்கணக்கான மக்கள்: வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு

 

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையின் 4ம் நாளில், நிறைவாக கொண்டாடப்படும் திருநாள் தான் காணும் பொங்கல். காணும் பொங்கல் என்றாலே குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் பொது இடங்கள் ஏதாவது ஒன்றிற்கு சென்று ஜாலியாக பொழுது போக்குவது என்றாகி விட்டது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ளவர்கள் கடற்கரை, மால், தியேட்டர், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றிற்கு சென்று ஜாலியாக பொழுதை கழித்து விட்டு வருவார்கள். அதுவே கிராமங்களில், வீட்டில் பல விதமான உணவுகளை சமைத்து எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று, அங்கு நீர் நிலைகளை வழிபட்டு, நண்பர்கள், உறவினர்களுடன் உணவுகளை பகிர்ந்து, விளையாடி மகிழ்ந்து காணும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்வார்கள்.

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் இன்று கொண்​டாடப்​படுகிறது. சென்னையை பொறுத்தவரை, பொது​மக்​கள் கடற்​கரை, பூங்கா உட்பட பொழுது​போக்கு மையங்​களுக்கு செல்​வது வழக்​கம். மக்​கள் அதி​கள​வில் கூடும் இடங்​களில் எவ்​வித அசம்​பா​வித​மும் நிகழாமல் இருக்க சென்னை காவல்துறை விரி​வான பாது​காப்பு ஏற்​பாடுகளை செய்​துள்​ளது. மெரினா கடற்​கரை​யில் மட்​டும் சுமார் 3 லட்​சம் பேர் ஒரே நேரத்தில் திரள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. எனவே, கடற்கரை முழுவதும் பொது மக்களின் கூட்டம் கட்டுங்கடங்காத அளவுக்கு இருக்கும். இதற்காக மெரினாவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு தற்காலிகமாக ஒரு காவல் கட்டுப்பாட்டு அறையும் காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, கேளிக்கை பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே, சென்னை மாநகரக் காவல்துறையினர் கடற்கரை மற்றும் பொது இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சென்னை முழுவதும் 16 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு மற்​றும் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளதாக சென்னை காவல் துறை அறிவித்துள்ளது. மெரினாவில் உழைப்பாளர் சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரையில் மணல் பரப்பில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மீதேறி நின்றபடி, 3 போலீசார் கூட்டத்தை கண்காணிப்பார்கள். ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. குற்ற நிகழ்வுகளை தடுக்க டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் காவல்துறை தெரிவித்துள்ளது. கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இளைஞர்கள், குழந்தைகள் ஆபத்தை உணராமல் கடலுக்குள் இறங்கி விளையாடுவார்கள். அப்போது, அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க இன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுப்பதற்காக சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும் கூட்டத்தைக் கண்காணிக்க குதிரைப்படை வீரர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். மேலும் கடற்கரை மணலில் எளிதாகச் செல்லக்கூடிய வகையிலான 10 நான்கு சக்கர வாகனங்களில் ரோந்துப் போலீசார் சுற்றி வருவார்கள். தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்களும் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல், செம்மொழி பூங்கா போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தற்காலிக காவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ள மால்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வண்டலூர் பூங்காவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பார்வை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: