உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது

 

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி உறுதிமொழியுடன் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். முதல் காளையாக அலங்காநல்லூர் முனியாண்டி சாமி கோயில் மாடு அவிழ்க்கப்பட்டுள்ளது. அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1000 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

மதுரை​யில் அவனி​யாபுரம், பாலமேடு ஜல்​லிக்​கட்டு நிறைவடைந்த நிலை​யில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்டது. இதன் பின்னர் வரிசையாக காளைகள் அவிழ்க்கப்பட்டு வருகின்றன. சீறும் காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டில் பங்​கேற்க தமிழகம் முழு​வதும் இருந்து 6,500 காளை​கள் பதிவு செய்​யப்​பட்​டிருந்​தன. அதில் சிறந்த 1,100 காளை​களுக்கு போட்​டி​யில் பங்​கேற்க டோக்​கன் வழங்​கப்​பட்​டுள்​ளது. 600 மாடு​பிடி வீரர்​கள் களம் இறங்​கு​கின்​றனர்.

போட்​டி​யில் அதிக காளை​களை அடக்​கும் சிறந்த வீரருக்கு சுமார் ரூ.20 லட்​சம் மதிப்​புள்ள சொகுசு காரும், சிறந்த காளை​யின் உரிமை​யாள​ருக்கு டிராக்​டரும் பரி​சாக வழங்​கப்​படு​கிறது. 2-ம் பரிசு பெறும் மாடு​பிடி வீரர், காளை​களுக்கு பைக்​கு​களும் பரி​சாக வழங்​கப்பட உள்​ளன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: