கழிவுநீர் வாறுகால்களில் தூர்வாரும் பணி தொடக்கம்

தேனி/உத்தமபாளையம் : தேனி அருகே, வீரபாண்டி பேரூராட்சியில் கலெக்டர் உத்தரவுப்படி பெரிய கழிவுநீர் வடிகால், சிறிய கழிவு நீர்வடிகால், நுண் வடிகால் என மூன்று வகைகளாக பிரித்து, ஜேசிபி மூலம் தூர்வாரும் பணி துவங்கியுள்ளது. இப்பணியை பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநயினார் நேரில் ஆய்வு செய்தார். மேலும், இப்பணி சிறப்பாக நடக்க வார்டு தோறும், பொறுப்பாளர்கள் நியமித்து, தூய்மைப்பணி கண்காணிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.இதேபோல, தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட பேரூராட்சிகளிலும் தூய்மைப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.உத்தமபாளையம்: தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின்பேரில், மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் முத்துக்குமார் அறிவுறுத்தல் படி, உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தொடங்கி வைத்தார்.இதற்கான தேவையான தளவாடங்களை கொள்முதல் செய்து, தினசரி 3 வார்டுகளில் தூய்மைப் பணி நடக்கிறது. இதில், பொதுமக்கள், சூழழியல் ஆர்வலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் பங்கு பெறலாம். பேரூராட்சி பணியாளர்கள் மூலம் தேவையான இடங்களில் இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்தியும், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யப்படுவதாக செயல் அலுவலர் கணேசன் தெரிவித்தார். இப்பணிகளை உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கெளசல்யா நேரில் ஆய்வு செய்தார்.தேவாரம்: தேவாரம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் கழிவுநீர் வாறுகால்களில் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேரூராட்சியில் பெரிய கழிவுநீர் வடிகால், சிறிய கழிவுநீர் வடிகால், நுண் வடிகால் என மூன்றாக பிரிக்கப்பட்டு, வடகிழக்கு பருவமழை தொடங்கினால், கழிவுநீர் தேங்காத வகையிலும், கொசுக்கள் உருவாகாமல் பொதுமக்களை பாதுகாத்திடும் வகையிலும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தூர்வாரும் பணி தொடங்கியது. இதன்படி தினசரி பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை நீக்கும் பணியில் ஜேசிபி பயன்படுத்தப்படுகிறது….

The post கழிவுநீர் வாறுகால்களில் தூர்வாரும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: